தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி படமும் இருக்கும்” - முதலமைச்சர் ஸ்டாலின்

அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் அரசியல் கற்றவர் என்றும் கட்சித் தொண்டகளை அரவணைப்பதிலும், வளர்ப்பதிலும் முன்னோடியாக திகழ்வதாகவும் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

ADMK Interim General Secretary  ADMK Interim General Secretary EPS  Sellur Raju  Sellur Raju press meet  sellur raju press meet at madurai  admk celebration  edappadi palanisamy  ஜெயலலிதா  செல்லூர் ராஜு  எடப்பாடி பழனிச்சாமி  செய்தியாளரை சந்தித்த செல்லூர் ராஜு  மதுரை செய்திகள்  கேரள முதலமைச்சர் பினராய் விஜயன்  அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர்  இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி  முல்லைப் பெரியாறு அணை  முதலமைச்சர் ஸ்டாலின்  அமைச்சர் துரைமுருகன்
செல்லூர் ராஜு

By

Published : Sep 3, 2022, 7:59 AM IST

மதுரை:அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும் எடப்பாடி பழனிசாமி இடைைக்கால பொதுச்செயலாளராக செயல்படலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதைத்தொடர்ந்து, நேற்று (செப் 2) அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை மாநகர் அதிமுக கட்சி அலுவலகத்தில் கட்சித் தொண்டர்களை சந்தித்து இனிப்பு வழங்கினார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர், “அதிமுகவின் வெற்றி சரித்திரத்தில் மற்றுமொரு மகுடமாக சிறப்பான தீர்ப்பை நீதிபதி வழங்கி இருக்கிறார். உயர் நீதிமன்றத் தீர்ப்பால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் இருந்த குழப்பம் நீங்கிவிட்டது. அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் அரசியல் கற்றவர். கட்சித் தொண்டகளை அரவணைப்பதிலும், கட்சியை வளர்ப்பதிலும் முன்னோடியாக திகழ்கிறார். இந்த வெற்றி எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த வெற்றி.

கேரளா செல்லும் முதலமைச்சர் 5 மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்னைக்கும், முல்லைப் பெரியாறு அணை சிக்கலுக்கும், ஆக்கப் பூர்வமாக தீர்வு காண வேண்டும். திமுகவிற்கு ஓர் ராசி உண்டு, ஆட்சிக்கு வந்தால் அணைப் பிரச்னை வரும். அப்படி கிடையாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் மாற்றிக் காட்ட வேண்டும்.

கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிக்கு மேல் நீர் தேக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு, அதை 5 மாவட்ட மக்களுக்கு ஓணம் பரிசாக தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். எங்களின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர்.

மதுரையில் செய்தியாளர்களை சந்துத்த செல்லூர் ராஜூ

நகைக்கடன் தள்ளுபடி செய்வோம் என்று சொன்னார்கள் செய்யவில்லை, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் உரிமைத் தொகையும் வழங்கவில்லை. பல திட்டங்களை திமுக செயல்படுத்தவில்லை. நிதி அமைச்சர் தன் செல்வாக்கை பயன்படுத்தி மதுரை மக்களுக்கு நிதியைப் பெற்று திட்டங்களை செயல்படுத்தட்டும். தற்போது மழை காரணமாக மக்கள் சாலையில் பயனிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.

10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் அரசு அலுவலர்கள் வேலை செய்வதை மறந்துவிட்டார்கள், ஆகையால் பயிற்சி கொடுக்க வேண்டுமென்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சொல்லியிருப்பது இந்த ஆண்டின் சிறந்த ஜோக். அவர் சட்டப் பேரவையில் மூத்தவர், எப்போதும் நகைச்சுவையாக பேசக் கூடியவர், அப்படித்தான் சொல்லி இருப்பார்.

எதிர்க் கட்சியாக இருந்தால் ஓர் நிலைப்பாட்டையும் ஆளும் கட்சியாக இருந்தால் ஓர் நிலைப்பாட்டையும் திமுக எடுத்து வருகிறது. அப்போது போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் முத்தரசன், பாலகிருஷ்ணன் இப்போது அகதிகளாக எங்கும் சென்றுவிட்டார்களா அல்ல வாய்முடி மவுனியாக மாறிவிட்டார்களா.

சட்டப் பேரவையில் ஸ்டாலின் எதிர்கட்சித் தலைவராக இருந்த போது வெட்கம் இருக்கா, மானம் இருக்கா, ரோசம் இருக்கா என்று ரமணா பட விஜய்காந்த் மாதிரி புள்ளிவிவரத்துடன் அடுக்கடுக்கான குற்றச் சாட்டுகளை கூறினார். கமிசனுக்காக செய்கிறாரா என்று எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி கேட்டார். அதை பொதுப்பணித்துறை அமைச்சர் எவ வேலு மறந்துவிட்டார் என்று நினைக்கிறேன்.

ஆளும் கட்சி எங்களை பற்றி பேசத்தான் செய்வார்கள் பேசவில்லை என்றால்தான் சங்கடப் படவேண்டும். அதிமுகவை மற்றக் கட்சிகளுடன் ஒப்பிடக்கூடாது. எம்.ஜி.ஆர் என்ற நடிகரால் தொடங்கப்பட்டு, ஜெயலலிதா அவர்களின் ஆட்சிக்கு பின் 4 ஆண்டுகள் விவசாயி எடப்பாடி பழனிசாமியால் சிறப்பான ஆட்சி கொடுக்கப்பட்டுள்ளது.

100 ஆண்டுகள் கட்சி இருக்க வேண்டுமானால் காலத்திற்கு ஏற்றாற்போல் மாற்றம் செய்வதில் தவறில்லை. நாங்கள் திமுகவை போல் வாரிசு அரசியல் செய்யவில்லை. அதிமுகவில் சாதாரண தொண்டன் தலைவனாக முடியும்.

கட்சியை காப்பாற்ற வழிநடத்த நல்ல கேப்டன் வேண்டும், அப்படி இருந்தால்தான் கட்சியை கொண்டு செல்ல முடியும். அப்படிப்பட்டவரை கேட்பனாக்கி உள்ளோம். இனி வரும் காலங்களில் அதிமுக கட்சித் தொண்டர்களின் சட்டையில் எம்.ஜி.ஆர் படம், ஜெயலலிதா படம், எடப்பாடி பழனிசாமி படமும் இருக்கும்” என்றார்.

இதையும் படிங்க: இலங்கை திரும்புகிறார் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச

ABOUT THE AUTHOR

...view details