மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டுள்ள. தேர்தல் ஆணையம் பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்கவும், பரிசுப்பொருட்கள் வழங்குவதைத் தடுக்கவும் தனிக்குழுக்கள் அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
நெருங்கும் இடைத்தேர்தல்: பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட அதிமுகவினர் அதிரடி கைது! - சிறை
மதுரை: இடைத்தேர்தல் நெருங்கிவரும் நிலையில், பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட நான்கு அதிமுகவினரை தேர்தல் பறக்கும்படையினர் கையும் களவுமாக பிடித்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில், மதுரை மாவட்டம் வில்லாபுரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய முயன்ற அதிமுகவைச் சேர்ந்த தமிழரசன், முத்துமணி, சிவக்குமார், ராமசாமி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும், இவர்களிடமிருந்து பணப்பட்டுவாடா செய்வதற்காக வைத்திருந்த ரூ.74 ஆயிரத்தினைப் பறிமுதல் செய்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். தேர்தல் நெருங்கிவரும் நிலையில், பறக்கும் படையினரின் இந்த அதிரடி நடவடிக்கை அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.