இதுகுறித்து ஆதித்தமிழர் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் கார்த்திக் செய்தியாளர்களிடம் பேசுகையில், '' கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தீண்டாமைச் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் மரணம் அடைந்தனர். இதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், அது ஒரு உயிருக்குப் போதுமானது அல்ல. அதனால் 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தினருக்கு அரசு வேலை கண்டிப்பாக வழங்க வேண்டும்.
தீண்டாமைச் சுவர்களை அகற்றுங்கள் - மதுரையில் மனு அளித்த ஆதித்தமிழர் கட்சியினர் - mettupalayam issue
மதுரை: தமிழ்நாட்டிலுள்ள தீண்டாமை சுவர்களை அகற்ற வேண்டும் என ஆதித்தமிழர் கட்சியினர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அங்கே நீதி கேட்டு போராடிய தலைவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து தீண்டாமைச்சுவர்களையும் அரசு கண்டறிந்து அகற்ற வேண்டும். இப்படி போராட்டம் நடத்தும் எங்களை காவல் துறையினர் கைது செய்து துன்புறுத்தி வருகின்றனர். இவற்றையெல்லாம் காவல்துறையினர் கைவிட வேண்டும். 17 பேர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காத எடப்பாடி பழனிசாமி அரசு உடனடியாக பதவி விலக வேண்டும்'' என்றார்.