தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அவனியாபுரம் ஆதிதிராவிடர்களுக்கான சுடுகாட்டுப்பகுதி ஆக்கிரமிப்பு - 8 வாரத்தில் மீட்க உத்தரவு - சுடுகாடு பகுதி

ஆதிதிராவிடர்களுக்கான சுடுகாட்டுப்பகுதியை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு 8 வாரத்தில் அகற்றி நடவடிக்கை எடுக்க மதுரை கலெக்டருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

ஆதிதிராவிடர்களுக்கான சுடுகாட்டு பகுதியை ஆக்கிரமிப்பில் இருந்து 8 வாரத்தில் மீட்க வேண்டும்
ஆதிதிராவிடர்களுக்கான சுடுகாட்டு பகுதியை ஆக்கிரமிப்பில் இருந்து 8 வாரத்தில் மீட்க வேண்டும்

By

Published : Nov 3, 2022, 8:09 PM IST

மதுரை: அவனியாபுரத்தைச் சேர்ந்த முனியசாமி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், 'மதுரை மாவட்டம், அவனியாபுரம் பகுதியில் உள்ள அரசுக்குச்சொந்தமான இடத்தில் அப்பகுதியில் காலம் காலமாக ஆதிதிராவிட மக்கள், இறந்தவர்களைத் தகனம் செய்யும் சுடுகாட்டுப் பகுதியாக பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால், தற்போது, இங்கு சிலர் தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வருகின்றனர். ஆக்கிரமிப்பினை அகற்றக்கோரி அலுவலர்களிடம் மனு அளித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. எனவே, ஆக்கிரமிப்பினை அகற்ற உத்தரவிட வேண்டும்' என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்யநாராயணபிரசாத் அமர்வு, ஆதிதிராவிடர் பயன்படுத்தும் சுடுகாட்டுப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் இருக்கும்பட்சத்தில், ஆக்கிரமிப்புகளை அகற்றி முறைப்படி நோட்டீஸ் வழங்கி 8 வாரத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க: மழை காரணமாக குறைந்த பயணிகளின் எண்ணிக்கை - மதுரை, கோவை விமானங்கள் ரத்து

ABOUT THE AUTHOR

...view details