தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடிகர் தீப்பெட்டி கணேசன் உடலுக்கு உதயநிதி அஞ்சலி - திரைப்பட நடிகர் தீப்பெட்டி கணேசன் மரணம்

மதுரை: மறைந்த திரைப்பட நடிகர் தீப்பெட்டி கணேசன் இல்லத்திற்கு சென்று நடிகர் உதயநிதி அஞ்சலி செலுத்தினார்.

udhayanithi
udhayanithi

By

Published : Mar 22, 2021, 6:16 PM IST

தமிழில் 'ரேனிகுண்டா', 'பில்லா 2', 'கண்ணே கலைமானே' உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்தவர் தீப்பெட்டி கணேசன். இவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். கடந்த 10 நாள்களுக்கு முன்பு மூளையில் ஏற்பட்ட தொற்று காரணமாக மதுரை இராசாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார்.

இதையடுத்து அவருக்கு உடல் நலம் குணமாகி இன்று (மார்ச் 22) வீடு திரும்புவதாக இருந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

கணேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய உதயநிதி

இதனைத் தொடர்ந்து கணேசனின் உடல் மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் கண்ணீர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

மதுரையில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டுவரும் உதயநிதி தன்னுடன் 'கண்ணே கலைமானே' படத்தில் நடித்த கணேசன் உடல்நலக்குறைவால் இறந்த செய்தி அறிந்து அவரது இல்லத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவரது மனைவி, குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details