தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘கடவுளின் மறு பிறப்பே; அகரத்தின் முதல்வரே!’ - சூர்யா ரசிகர்கள் அட்ராசிட்டிஸ்! - போஸ்டர்

மதுரை: புதிய கல்விக் கொள்கை குறித்து பேசிய நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் மதுரை முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர்களில் அவர் அரசியலுக்கு வர வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.

சூர்யாபோஸ்டர்

By

Published : Jul 24, 2019, 10:57 AM IST

புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியதற்கு தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி வரும் நிலையில், போஸ்டருக்கும் வசனத்திற்கும் பெயர் போன மதுரையில் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் அவரது கருத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் சுவாரசிய வசனங்கள் அடங்கிய போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

சூர்யா போஸ்டர்கள்

ஏழை குழந்தைகளுக்கு கல்வி தந்த அகரத்தின் முதல்வரே..!, விவசாயிகளை காக்க வந்த கடவுளின் மறு பிறப்பே..!, கல்விக்காக கண் திறந்த இளைய காமராசரே..! உள்ளிட்ட அரசியல் வாசகங்கள் அடங்கிய பதிவுகள் அதில் இடம்பெற்றுள்ளன. இதுபோன்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் மதுரை மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details