தமிழில் வெளியான 'சுந்தரபாண்டியன்', 'தர்மதுரை', 'பூஜை', 'ஜிகர்தண்டா', 'தெறி' போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் செளந்தர்ராஜா. இவர் தனது பிறந்தநாளை முன்னிட்டு மரம் நாடும் விதமாக பனை விதைகளை நட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் எதிரில் உள்ள கண்மாய் கரை பகுதிகளில் பனை விதைகளை அவர் நட்டார்.
பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பனைமரத்தின் பயன்கள் பலருக்கு தெரியாது. இவை பல வருடங்கள் வாழக்கூடியது. எத்தகைய வறட்சியையும் தாக்குப்பிடித்து மற்ற எல்லா வளங்களும் வற்றி வறண்டுபோன பிறகும் கூட மனித இனத்தைக் காப்பாற்றி பயன்தரக்கூடியது.