தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தங்கம் என நினைத்து கவரிங் செயினை பறிக்க முயன்ற இளைஞருக்கு தர்ம அடி! - மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை: சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்கம் என நினைத்து கவரிங் செயினை பறிக்க முயன்று வசமாக மாட்டிகொண்ட இளைஞரை மடக்கி பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மதுரையில் தங்கம் என நினைத்து கவரிங் செயினை பறிக்க முயன்ற இளைஞருக்கு தர்ம அடி
மதுரையில் தங்கம் என நினைத்து கவரிங் செயினை பறிக்க முயன்ற இளைஞருக்கு தர்ம அடி

By

Published : Aug 27, 2020, 6:53 PM IST

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குலமங்கலத்தில் உள்ள மணியஞ்சி பகுதியை சேர்ந்த விஜயா என்ற பெண் தனியாக சாலையில் நடந்து சென்றதை நோட்டமிட்ட இளைஞர் ஒருவர் அவரை டூவிலரில் பின்தொடர்ந்து சென்று அவர் கழுத்தில் அணிந்திருந்த செயினை பறிக்க முயற்சித்துள்ளார்.

விஜயா இது கவரிங் செயின் விட்டு விடுங்கள் என்று கெஞ்சியவாறு அலறியுள்ளார். ஆனால் அதனை காதில் வாங்காத இளைஞர் வலுக்கட்டாயமாக செயினை பறித்துள்ளார். இதனை அறிந்த கிராம மக்கள் வாலிபரை மடக்கி பிடித்து அடித்தனர்.

பின்னர் அலங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து இளைஞரை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். காவல்துறையினரின் விசாரணையில் நகை பறிப்பில் ஈடுபட்டது மதுரை முல்லைநகரை சேர்ந்த பாலமுருகன் என்பது தெரியவந்தது.

பாலமுருகனை கைது செய்த அலங்காநல்லூர் காவல்துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details