தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தை அமாவாசை : மதுரை - காசி இடையே சிறப்பு ரயில் - ஒரு டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா? - ஸ்பெஷல் டிரெய்ன்

தை அமாவாசையை முன்னிட்டு மதுரையில் இருந்து காசி உள்ளிட்ட திருத்தலங்களுக்கு ஆன்மிக சுற்றுலா செல்ல சிறப்பு ரயில் குறித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சிறப்பு ரயில்
சிறப்பு ரயில்

By

Published : Dec 12, 2022, 4:10 PM IST

மதுரை: தை அமாவாசையை முன்னிட்டு மதுரையில் இருந்து காசி உள்ளிட்ட பல்வேறு திருத்தலங்களுக்கான ஆன்மிக சுற்றுலா பேக்கேஜ் சிறப்பு ரயில் குறித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மதுரையில் இருந்து ஜனவரி 16ஆம் தேதி புறப்படும் ரயில் மீண்டும் ஜனவரி 28ஆம் தேதி மதுரை வந்து சேரும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணம் தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள விவரங்கள் பின்வருமாறு:

மதுரையில் இருந்து ஜனவரி 16ஆம் தேதி புறப்படும் ரயில், ஜனவரி 19 அன்று திரிவேணி சங்கமம் செல்கிறது. தொடர்ந்து அலோபி தேவி சக்தி பீடம் தரிசனம் முடித்து ஜனவரி 20ஆம் தேதி கங்கையில் புனித நீராடி, காசி விஸ்வநாதர், அன்னபூரணி, ஸ்ரீ விசாலாட்சி சக்தி பீட தரிசனம் மற்றும் மாலை ஆரத்தியில் பயணிகள் பங்கேற்கலாம்.

தொடர்ந்து ஜனவரி 21ஆம் தேதி கயாவில் உள்ள மங்கள கௌரி சக்தி பீடம், ஜனவரி 23ஆம் தேதி காமாக்கியா தேவி சக்தி பீடம், ஜனவரி 25ஆம் தேதி கொல்கத்தா காளி தேவி, காளிகாட், பேளூர் மடம், தச்சினேஸ்வரர் தரிசனம் மற்றும் ஜனவரி 26ஆம் தேதி ஒடிசா பூரி கொனார்க் சூரிய கோயில், சந்திரபாகா கடற்கரை, பூரி ஜெகநாதர் ஆலயம், பிமலா தேவி சக்தி பீடம் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியாக ஜனவரி 28ஆம் தேதி ஆன்மிக சுற்றுலா முடிந்து ரயில் மீண்டும் மதுரை வந்து சேருவதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டியில், கட்டணம், தங்குமிடம், உணவு, உள்ளூர் பேருந்து வசதி, உள்பட ஒருவருக்கு 21 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணமும், குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டியில் பயணம் 27 ஆயிரத்து 800 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

பயணச் சீட்டு முன்பதிவு தொடர்பாக www.ularail.com என்ற இணையதளத்திலும், விவரங்களுக்கு 7305858585 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:காரில் தொங்கிச் செல்வது மேயர் விருப்பமா..? நேயர் விருப்பமா..? தமிழிசை சவுந்தரராஜன்

ABOUT THE AUTHOR

...view details