தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமைச்சர் பிடிஆர் மீது நடவடிக்கை வேண்டும்... மதுரை மாநகர காவல் ஆணையரிடம் மனு... - அமைச்சர் பிடிஆர் மீது கொலை முயற்சி வழக்கு

நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீது நடவடிக்கை எடுக்குமாறு மதுரை பாஜக நிர்வாகி மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளார்.

Etv Bharat அமைச்சர் பிடிஆர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு
Etv Bharat அமைச்சர் பிடிஆர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு

By

Published : Aug 13, 2022, 9:59 PM IST

மதுரை: பாஜக மாவட்ட பொருளாளர் ராஜ்குமார் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீது மாநகர காவல் ஆணையரிடம் அளித்துள்ள புகாரில், "காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பாஜகவினர், மதுரை விமான நிலையத்தில் காத்திருந்தோம். அந்த நேரத்தில் அங்கு வந்த நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பாஜகவினரை உள்ளே அனுமதிக்கக்கூடாது என்று கூறியது மட்டுமல்லாமல் தகாத வார்த்தைகளால் திட்டினார்.

இதனால் உணர்ச்சிவசப்பட்ட பாஜக தொண்டர்கள் நிதியமைச்சர் விமானநிலையத்தைவிட்டு வெளியேறிபோது, அவரது காரை மறித்து எதிர்ப்புக் காட்டியுள்ளனர். அப்போது அவரது காரை எங்களது தொண்டர்கள் மீது ஏற்ற உத்தரவிட்டார். இது கொலை முயற்சியாகும். அதோடு அவரது உத்தரவின்பேரில் எங்களது தொண்டர்கள் மீது காவல் துறையினரும், திமுகவினரும் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். ஆகவே எங்கள் மீது தாக்குதல் நடத்தியவர் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:வீரமரணமடைந்த மதுரை ராணுவ வீரர்.. 21 குண்டுகள் முழங்க சொந்த ஊரில் நல்லடக்கம்..

ABOUT THE AUTHOR

...view details