தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை மத்திய சிறையில் கலவரத்தை உண்டாக்கிய 9 கைதிகள் இடமாற்றம்! - சிறை கைதி

மதுரை: மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே மோதலை ஏற்படுத்தியதாக 9 சிறைக் கைதிகளை வேறு சிறைக்கு மாற்றம் செய்து சிறைத்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

மதுரையில் சிறையில் கலவரத்தை உண்டாக்கிய 9 கைதிகள் இடம் மாற்றம்

By

Published : May 4, 2019, 8:34 PM IST

மதுரை மத்திய சிறையில் கடந்த மாதம் 23ஆம் தேதி கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலானது இன்று போராட்டமாக வெடித்து கைதிகள் அனைவரும் சிறையின் முதல் தளத்தில் ஏறி போராட்டம் நடத்தினர்.

அந்த போராட்டத்தினால் சாலையில் செல்லும்போது மக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது, பின் மதுரை சிறைத்துறை தலைவர் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு அனைவரும் கீழே இறங்கினர்.

இருப்பினும் சிறையில் மோதலை ஏற்படுத்தி போராட்டத்திற்குத் தூண்டியதாக அருண், பெரியண்ணா, கண்ணன், சோனை, ராஜேஷ் கண்ணா, பவித்ரன், வினோத், அமினி, முத்துக்குமார் ஆகிய ஒன்பது நபர்களை மதுரை சிறையில் இருந்து திருச்சி, கடலூர், வேலூர், கோயம்புத்தூர் உள்ள மத்திய சிறைக்கு மாற்றம் செய்ய சிறைத்துறை தலைவர் உத்தரவு பிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து அனைவரும் பலத்த காவல் பாதுகாப்புடன் சிறையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டனர்.

மதுரை சிறையில் கலவரத்தை உண்டாக்கிய 9 கைதிகள் இடமாற்றம்

ABOUT THE AUTHOR

...view details