மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் உயர்சிகிச்சை மருத்துவமனை வளாகத்தில், கரோனாவால் பாதித்தவர்கள் சிறப்பு சிகிச்சை பெற்றுவருகின்றனர். மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், வேளாண்மைப் பல்கலைக் கழகம், தியாகராஜர் பொறியியல் கல்லூரி ஆகியவற்றிலும் கரோனா சிகிச்சை மையங்கள் இயங்கிவருகின்றன.
மதுரையில் இன்று (ஜூலை 6) மட்டும் 245 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 338 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் ஏழு பேர் சிகிச்சை பலனின்றி இறந்ததால், கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69ஆக உயர்ந்துள்ளது.