தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கட்டடம் இடிந்து விபத்து: 4 பேரை மீட்கும் பணி தீவிரம்! - collpased buiding

மதுரை: செக்கானூரணி அருகே கட்டடம் இடிந்து விழுந்ததில் நான்கு பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

கட்டடம் இடிந்து விபத்து

By

Published : Jul 5, 2019, 8:24 PM IST

மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகே உள்ள கள்ளர் மேல்நிலைப் பள்ளிக்குப் பின்புறம் உள்ள ஒரு பகுதியில் மாதவன் என்பவரை ஒப்பந்ததாரராகக் கொண்டு புதிய வீட்டின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) மாலை ஆறு மணியளவில் திடீரென அந்த வீடு சரிந்ததில் உள்ளே வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் ஏழு பேர் சிக்கிக் கொண்டனர். அவர்களில் மூவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர். நான்கு பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

காயமடைந்தவர்களை மீட்கும் காட்சி

மூன்று பேர் படுகாயத்துடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மீதமுள்ள நான்கு பேரை தீயணைப்புத்துறையினர் மீட்டு வருகின்றனர். அந்த நால்வரும் உள்ளே பலியாகி இருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்திற்கு, மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர்.

கட்டடம் இடிந்து விபத்து

ABOUT THE AUTHOR

...view details