மதுரையில் நேற்று பட்டப்பகலில் ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் தெற்குவாசல் அருகே உள்ள தெற்கு மாரட் வீதியில் நடந்து சென்ற போது நான்கு பேர் கொண்ட கும்பல் அவரை ஓட ஓட விரட்டி கொடூரமாக வெட்டி கொலை செய்தது.
மதுரையில் பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக்கொலை - 4 பேர் கைது! - madurai
மதுரையில் இளைஞர் நடுரோட்டில் ஓட ஓட விரட்டி கொலை செய்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரையில் பட்டபகலில் இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம்! 4 பேர் கைது!
இந்த சம்பவம் தொடர்பாக உதவி ஆணையர் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், குடும்ப பிரச்னை காரணமாக சதீஷ்குமாரின் முன்னாள் மனைவி அனிதாவின் அண்ணன் அரவிந்த் குமார் மற்றும் அவரது கூட்டணிகள் அவரை கொலை செய்துள்ளனர் என்று தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து, கோவில்பட்டியில் பதுங்கியிருந்த அரவிந்த் குமார், விஜய், ஆனந்த், தனபாண்டி, நான்கு பேரையும் தனிப்படையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.