மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா வைரசின் தாக்கம் மிகத் தீவிரமாக உள்ளது. நாள்தோறும் 200 என்ற பாதிப்பு எண்ணிக்கையிலிருந்து தற்போது 300ஆக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
மதுரையில் இன்று 334 பேருக்கு கரோனா உறுதி - கரோனா வைரஸ்
மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 334 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மதுரை அரசு மருத்துவமனை
அந்த வகையில் இன்று ஒரேநாளில் அம்மாவட்டத்தில் 334 பேர் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அதுமட்டுமின்றி இன்று ஒரே நாளில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை அம்மாவட்டத்திலிருந்து ஆயிரத்து 111 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், 3 ஆயிரத்து 486 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 77 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.