மதுரை: தெப்பக்குளம் பங்கஜம் காலனியைச் சேர்ந்தவர் அசோக் குமார். வீடுகளுக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்யும் தொழிலாளியான இவர், பனைமரம் குறித்த விழிப்புணர்வு, பிளாஸ்டிக் ஒழிப்பு, கரோனா விழிப்புணர்வு என பல்வேறு சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
அதன்படி, அண்ணா பேருந்து நிலையம் அருகில் நின்று தாம்பூலத் தட்டில் முகக்கவசங்களும், கடலை மிட்டாய்களையும் வைத்து மக்களுக்கு இலவசமாக வழங்கினார். தொடர்ந்து, முகக்கவசங்கள் அணிவதன் அவசியம் குறித்து சிறுவன் சுதர்சன் பேசியதை, அங்கிருந்த பொதுமக்கள் வியந்து பார்த்தனர்.
சிறுவனின் இந்த செயல் பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ள நிலையில், இது குறித்த காணொலி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: சஞ்சனாவின் தூய அன்புக்கு நன்றி - உதயநிதி ஸ்டாலின்