மதுரை அரசு இராசாசி மருத்துவமனை விரிவாக்க கட்டிடத்தின் எதிரே அமைந்துள்ள உயர்தர பல்நோக்கு சிகிச்சை மருத்துவமனை வளாகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மதுரை, மதுரை புறநகர், விருதுநகர் தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்தும் கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பல நபர்கள் இங்கே சிகிச்சை பெற்று வருகின்றனர். பிற மாநிலங்களிலிருந்து வந்த மதுரையைச் சேர்ந்த நபர்களும் இங்கேயே தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.