மதுரை:இதுதொடர்பாக இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "அகில இந்திய அளவில் ரயில் பயணச்சீட்டுகளை முறைகேடாக விற்ற 5,179 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பயணச்சீட்டு வழங்க உருவாக்கப்பட்ட 140 சட்டவிரோத மென்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவை செயலிழக்க வைக்கப்பட்டுள்ளன.
ரயில்களில் 80 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்களைக் கடத்திய 1,081 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய ரயில்வேயில் 143 ரயில் நிலையங்களில் குழந்தைகள் உதவி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுவரை ரயில் நிலையங்களில் 17,756 சிறுவர், சிறுமிகள் மீட்கப்பட்டு, அவர்கள் அனைவரும் முறைப்படி பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
ரயில்வே சொத்துக்களை அபகரித்த 11,268 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 7.37 கோடி ரூபாய் மதிப்புள்ள ரயில்வே சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. 194 மனித கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 559 அப்பாவிகள் மீட்கப்பட்டுள்ளனர். ஓடும் ரயில்களில் ஏறி நடைமேடையில் விழுந்த 852 பேர், ரயில்வே பாதுகாப்புப் படையால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.