தமிழ்நாடு

tamil nadu

ராகிங்கில் ஈடுபட்ட 19 மருத்துவக் கல்லூரி மாணவர்கள்: விடுதியில் தங்க அனுமதி

By

Published : Dec 13, 2019, 12:09 AM IST

மதுரை: ராகிங்கில் ஈடுபட்ட 19 மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான தடை நீக்கம் முடிந்து விடுதியில் தங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

madurai medical college
madurai medical college

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் முதலாமாண்டு மாணவரை 2018ஆம் ஆண்டு அங்கு பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் விடுதியில் தங்கியிருந்தபோது ராகிங்கில் ஈடுபட்டதாக முதலாமாண்டு மாணவரின் தந்தை இந்திய மருத்துவ கழகத்திற்கு புகாரளித்திருந்தார்.

அவர் அளித்த புகாரைத் தொடர்ந்து மதுரை மருத்துவக் கல்லூரியில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், விசாரணையின் முடிவில் 19 மாணவர்கள் ராகிங்கில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து அந்த 19 மாணவர்களையும் அப்போதைய மருத்துவக் கல்லூரி முதல்வர் மருதுபாண்டி ஒருமாத காலம் கல்லூரி வர தடை விதித்தார்.

மேலும், ஆறு மாத காலம் விடுதிகளில் தங்குவதற்கு தடை விதித்தார். தற்போது ஆறு மாத காலம் நிறைவடைந்து அந்த 19 மாணவர்களுக்கும் விடுதியில் தங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'சனிக்கிழமையும் வேட்புமனுக்கள் பெறப்படும்' - தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details