காவல் துறையில் சிறந்து விளங்கும் காவலர்களுக்கு மத்திய அரசு 'அதி- உத்கிருஷ்ட சேவா, உத்கிருஷ்ட சேவா படக்’ ஆகிய விருதுகளை வழங்கி வருகிறது. சி.எஸ்.எஃப்., சி.ஆர்.பி.எஃப் வீரர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுவந்த இந்த விருது தற்போது முதன்முறையாக தமிழ்நாடு காவல் துறையைச் சேர்ந்தவர்களுக்கு அவர்களின் பணி, அர்ப்பணிப்பு, புலனாய்வு ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.
எவ்வித குற்றச்சாட்டுகளுக்கும் இடமின்றி 18 முதல் 25ஆண்டுகள் பணி அனுபவம் உள்ள காவலர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
மதுரை நகர் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் திருமலைக்குமார், மதுரை நகர் நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் தர்மலிங்கம், ஆள் கடத்தல், குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் ஹேமா மாலா, சமயநல்லூர் காவல் ஆய்வாளர் கண்ணன், திண்டுக்கல் உளவுத்துறை ஆய்வாளர் முத்துலட்சுமி, தூத்துக்குடி மேக்னாபுரம் காவல் நிலைய எஸ்ஐ பச்சைம்மாள், மதுரை வாலாந்தூர் காவல் நிலைய எஸ்ஐ அருண்குமார், நெல்லை நகர் காவல் தொழில்நுட்ப பிரிவு எஸ்ஐ உலகம்மாள், விருதுநகர் தொழில்நுட்ப பிரிவு எஸ்ஐ ராஜபாண்டியன் ஆகியோர் 18 ஆண்டுகளில் எவ்வித குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் பணி புரிந்து, ‘ உத்கிருஷ்ட சேவா படக் ’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.