தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவல் குறைவாக உள்ள 27 மாவட்டங்களுக்கு ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் வழங்கி அரசு உத்தரவிட்டது. அதன்படி அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கும் அனுமதியளிக்கப்பட்டது.
இதனையடுத்து இன்று மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11ஆம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் விண்ணப்பங்களைப் பெற்றுச் சென்றனர்.