தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வந்தே பாரத் திட்டம்:மதுரையில் 11 விமானங்கள் தரையிறங்கப்படும்!

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் 11 விமானங்கள் மூலம் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை மீட்டு, மதுரை விமான நிலையத்திற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

By

Published : Aug 30, 2020, 6:25 PM IST

Updated : Aug 30, 2020, 7:02 PM IST

flight
flight

வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்கள் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் சொந்த ஊர்களுக்கு அழைத்து வரப்படுகின்றனர். தற்போது உள்நாட்டு விமான சேவையும் இயக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்கும் வந்தே பாரத் திட்டத்தின் 6ஆம் கட்டம் செப்டம்பர் 1ஆம் தேதி தொடங்குவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த மே 6ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 28ஆம் தேதி வரையில் ஐந்து கட்டங்களாக ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் மூலம் வெளிநாடுகளில் சிக்கித்தவித்த 3.86 லட்சம் இந்தியர்கள் மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.அதனைத் தொடர்ந்து செம்டம்பர் மாதம் தொடங்கும் வந்தே பாரத் திட்டத்தில், 145 விமானங்கள் மூலம்புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மீட்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதில் 11 விமானங்கள் மூலம் தமிழர்களை மீட்டு மதுரையில் தரையிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், துபாய், அரபு நாடுகளில் இருந்து 10 விமான சேவையும் சிங்கப்பூருக்கு ஒரு விமான சேவையும் வழங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Aug 30, 2020, 7:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details