மதுரை:கடந்த 2012 ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த முருகன் (59), நாக பாண்டி (27), முனியாண்டி (56), விக்னேஸ்வரன், பழனிவேல், சங்கர் ஆகியோர் கூட்டு சேர்ந்து அப்பாவி பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ததாக நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு ஆனது.
இந்த வழக்கு விசாரணை கடந்த 10 ஆண்டுகளாக மதுரை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று தீர்ப்பு வெளியானது. அதில் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் ஆறு பேருக்கும் பத்தாண்டுகள் சிறை தண்டனையுடன் ரூபாய் 4,000 அபராதமும் விதிக்கப்பட்டது.