விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக் தாகூர் திருமங்கலம் பகுதியில் உள்ள டி.புதுப்பட்டி கிராமத்தில் நடைபெற்று வரும் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை ஆய்வு செய்தார். அப்போது, 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்யும் மக்களுடன் அமர்ந்து மதிய உணவை சாப்பிட்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கூறுகையில், “பத்தில் ஒருவருக்கு தான் தற்போது 100 நாள் வேலை கிடைத்துள்ளது. 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு ரூ.151 சம்பளமாக வழங்கப்படுகிறது. ரூ.200 கொடுக்க வேண்டும் என நிர்மலா சீதாராமன் கொடுத்து அறிக்கைக்கும், தற்போது இவர்கள் வாங்கும் சம்பளத்துக்கு இடையே சமூக இடைவெளி இருக்கிறது.
100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் என்பது, 200 நாள் வேலைவாய்ப்புத் திட்டமாக மாற்றப்பட வேண்டும். மதுரை விமான நிலையத்தை பொறுத்தவரையில், 2010ஆம் ஆண்டு புதிய விமான நிலையம் கட்டப்பட்டு, 2012இல் சரக்கு ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதற்குப் பிறகு எந்த ஒரு வளர்ச்சியும் அடையாமல் இருந்துவருகிறது.