மதுரை: பரமக்குடியைச் சேர்ந்த பாலமுரளி, மேலூர் வழக்கறிஞர் ஸ்டாலின், உள்பட பலர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
அதில், "தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த மக்கள் உள்ளனர். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்துக்கு மொத்தமாக 20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
20 விழுக்காட்டில் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு ஒதுக்கீடு
தமிழ்நாடு அரசு சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு பிப்ரவரி 28ஆம் தேதி சட்ட மசோதா ஒன்றை நிறைவேற்றியது. அதன்படி பிற்படுத்தப்பட்டோருக்கான 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் வன்னியர் சமூகத்தினருக்கு 10.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்கு தமிழ்நாடு முன்னாள் ஆளுநரும் ஒப்புதல் அளித்துள்ளார்.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தில் மொத்தமாக உள்ள 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. 68 சமூகங்களைக் கொண்ட சீர்மரபினர்களுக்கு ஏழு விழுக்காடு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 40 சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு 2.5 விழுக்காடு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
40 சமூகங்கள் பாதிப்புக்குள்ளாகும் அச்சம்