தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்ததையடுத்து மாவட்டத்தில் 70க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் சமயநல்லூர் பேருந்து நிலையம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் பொழுது, அந்த வழியே வந்த வாகனம் ஒன்றை வழிமறித்து அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சேலத்திலிருந்து மதுரையில் உள்ள பிரபல நகைக் கடைக்கு 10 கோடி மதிப்பிலான, 70 கிலோக்கும் மேல் தங்க நகைகளை 20க்கும் மேற்பட்ட பெட்டியில் எடுத்துச் செல்லப்படுவது தெரியவந்தது.
ரூ. 10 கோடி மதிப்பிலான தங்க நகை பறிமுதல் - தங்க நகை பறிமுதல்
மதுரை: உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 10 கோடி மதிப்பிலான தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தங்கம் பறிமுதல்
மேலும் நகைகள் கொண்டு எந்தவித ஆவணங்களும் இல்லாம் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்தனர். நகைகளை ஆய்வு செய்த அதிகாரி அதனை மாவட்ட சார் நிலை கருவூலத்தில் ஒப்படைத்தார். இதை தொடர்ந்து தகவலறிந்து வந்த வருமானவரித் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் குறித்த மதிப்பீடு மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்தனர் .