தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எருதுவிடும் விழாவிற்கு அனுமதி கோரி இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் - போலீசார் மீது தாக்குதல் - எருதுவிடும் விழா

ஓசூர் அருகே எருதுவிடும் விழாவிற்கு அனுமதிக்க வலியுறுத்தி இளைஞர்கள் 3 மணிநேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சாலை மறியலில் ஈடுபட்டவர்கள், காவல் துறையினரை விரட்டி தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 2, 2023, 11:00 PM IST

எருதுவிடும் விழாவிற்கு அனுமதி கோரி இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி: ஓசூர் அடுத்த கோப்பசந்திரம் கிராமத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் பாரம்பரிய எருதுவிடும் விழா நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு பிப்ரவரி 2ஆம் தேதியன்று நடைபெறும் என கடந்த 20 நாட்களாக விளம்பரப்படுத்தப்பட்டது.

நேற்று மாலை வரை சென்னையில் அனுமதி பெற்று வரப்பட்டது கூறிய நிலையில் இன்று காலை 6 மணி முதல் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், 100க்கும் மேற்பட்ட மாடு, காளைகள் பல்வேறு பகுதிகளிலிருந்து அழைத்து வரப்பட்டன, ஆனால் எருதுவிடும் விழாவிற்கு காவல் துறையினர் அனுமதிக்கவில்லை.

இதனால், திடீரென ஆயிரக்கணக்கானோர் பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த சூளகிரி தாசில்தார் அனிதா அவர்களை, காரில் இருந்து இறங்க விடாமல் முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர்.

செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்பி சரோஜ்குமார் தாகூர்

சாலை மறியலை கட்டுப்படுத்த கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் எருதுவிடும் விழாவிற்கு அனுமதி அளிக்கப்பட்டதால் கூட்டத்தின் பெரும்பகுதி எருதுவிடும் விழாவிற்கு சென்றுவிட்டாலும் இனி எருதுவிடும் விழாக்களுக்கு தடையில்லை என்கிற உத்திரவாதத்தை அளிக்குமாறு சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் திடீரென காவல் துறையினரை நோக்கி கற்களை வீச தொடங்கினர்.

உடனடியாக அதி விரைவுப்படை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததும் இளைஞர்கள் பல குழுக்களாக பிரிந்து தாக்குதலை அதிகரித்தனர். காவல் துறையினர், தண்ணீர் பீய்ச்சி அடித்து, புகைக்குண்டு வீசியும் கலவரத்தை கட்டுப்படுத்தி 3 மணிநேர சாலை மறியல் போராட்டத்தை முடித்து வைத்தனர்.

இதில், கலவரகாரர்கள் கல்வீசியதில் மாவட்ட எஸ்பி உட்பட 10 காவல் துறையினர், 5 வாகனங்கள் அரசு, தனியார் பேருந்துகள் சேதமடைந்தது. பின்னர் காவல் துறையினரை கலவரகாரர்களை தேடிப்பிடித்து கைது சம்பவங்களில் ஈடுபட்டு 200 பேரை கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

இதுகுறித்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட எஸ்பி சரோஜ்குமார் தாகூர், “மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கும் விழாக்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். எருதுவிடும் விழா நடத்த கோரிக்கை வைக்கும் இளைஞர்கள் உயிரிழப்புகள் குறித்தோ, அரசு அனுமதி குறித்தோ யோசிப்பதில்லை.

இன்று கைது செய்யப்பட்ட 200 பேரும் விடுக்கப்படுவதுடன் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் வீடியோ காட்சிகள் மூலம் கைது செய்யப்படுவார்கள் எனவும் கலவரகாரர்கள் தாக்கியதில் காவல் துறையினர் காயமடைந்திருப்பதாக கூறினார்.

இதையும் படிங்க:பள்ளிக்கு கட்.. முருகபக்தர்களிடம் அன்னதானம் வாங்கி உண்டு உறக்கம்: போலீஸை கதறவிட்ட சுட்டி பாய்ஸ்

ABOUT THE AUTHOR

...view details