மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தேசிய அடையாள அட்டைகள் வழங்கும் திட்டம், செவித்திறன் குறைபாடுடைய, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கும், பார்வையற்றோருக்கும் ஆரம்ப நிலை பயிற்சி அளிக்கும் வசதிகள், சிறப்புக் கல்வி உதவித்தொகை, பார்வையற்றோருக்கு வாசிப்பாளர் உதவித்தொகை உயர்கல்வி பயில உதவி, பிரெய்லி புத்தகங்கள் வழங்குதல், சட்டக்கல்வி படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு மேட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள், மானியத்துடன் கூடிய பல்வேறு பொருளாதாரக் கடனுதவிகள் ஆகியவை வழங்கப்பட்டுவருகின்றன.
11,925 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.17.59 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் - Welfare Program Assistance
கிருஷ்ணகிரி: ரூ.17.59 கோடி மதிப்பீட்டில் அளிக்கப்பட்ட நலத்திட்ட உதவிகளை கொண்டு 11,925 மாற்றுத்திறனாளிகள் பயனடைந்ததாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.
நலத்திட்ட உதவிகள்
2016-17ஆம் ஆண்டில் ரூ.4.16 கோடி மதிப்பீட்டில் 3,366 மாற்றுத்திறனாளிகளுக்கும், 2017-18ஆம் ஆண்டில் ரூ.5.68 கோடி மதிப்பீட்டில் 3,613 மாற்றுத்திறனாளிகளுக்கும், 2018-19ஆம் ஆண்டில் ரூ.7.75 கோடி மதிப்பீட்டில் 4,946 மாற்றுத்திறனாளிகளுக்கும் என மொத்தம் ரூ.17.59 கோடி மதிப்பீட்டில் 11,925 மாற்றுத்திறனாளிகள் பயன்பெற்றுள்ளனர் என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.