கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகரில் ஊரடங்கு காரணமாக சாலைகளில் ஆதரவற்றோர் உணவின்றித் தவித்து வந்தனர். ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏழை எளியோர் முழு ஊரடங்கால் வீடுகளில் முடங்கி வருவாயின்றி உணவு பொருள்களைப் பெற சிரமப்படும் சூழலில், ஓசூர் பாய்லர் டிரேடர் அஷோசியேசன், பிஸ்மி சிக்கன் சென்டர் ஆகியவை ஒன்றிணைந்து அப்பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு ஒருநேர சுவையான சிக்கன் பிரியாணி வழங்குவதென முடிவுசெய்தனர்.
சாலையோரமாக உள்ள ஏழை, எளியோருக்கு சிக்கன் பிரியாணி வழங்கிய தன்னார்வலர்கள் - கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்
கிருஷ்ணகிரி: ஓசூரில் சாலையோரமாக உள்ள ஏழை, எளியோருக்கு தன்னார்வலர்கள் சிக்கன் பிரியாணி வழங்கினர்.
ஏழை எளியோருக்கு சிக்கன் பிரியாணி வழங்கிய தன்னார்வலர்கள்
அதன்படி 200 கிலோ அரிசி, 150 கிலோ சிக்கன் மூலம் சமைக்கப்பட்ட சுவையான சிக்கன் பிரியாணியை ஓசூரில் சாலைகளில் உள்ள ஆதரவற்றவர்கள், கிராமப் பகுதியில் பொதுமக்களுக்கு ரோந்துப் பணியில் ஈடுபட்ட காவல் துறையினர், மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட ஆயிரம் பேருக்கு வழங்கினர்.