கிருஷ்ணகிரி மாவட்டம் பெரியமட்டாரப்பள்ளியில் இயங்கி வரும் அரசு பள்ளியில் காவ்யா 9 ,சுபித்ரா 14 ஆகிய மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்கள் இருவரும் இன்று மதியம்
தாண்டவப்பள்ளம் அருகே உள்ள குட்டையில் விளையாடிக் கொண்டிருந்தனர். இவர்கள் விளையாடும் பகுதியில் குடிமராமத்து பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. விளையாடிக்கொண்டிருந்த இருவரும் குட்டைக்குள் குளிக்க தண்ணீரில் இறங்கியதாக தெரிகிறது.
தண்ணீரில் மூழ்கி பள்ளி மாணவிகள் மரணம்!
கிருஷ்ணகிரி: வரட்டணபள்ளி அருகே உள்ள தாண்டவப்பள்ளம் குட்டையில் மூழ்கி பள்ளி மாணவிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேறும் சகதியுமாக ஆள் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் இருந்துள்ளது. இந்நிலையில் குளிக்கச் சென்ற இருவரும் தண்ணீரில் மூழ்கி இறந்தனர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் இறந்த மாணவிகளின் உடல்களை மீட்டனர். தொடர்ந்து வந்த காவல்துறையினர் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் குளம், குட்டை, ஆறு, ஏரிகளில் யாரும் எக்காரணத்தை கொண்டும் குழந்தைகளை விளையாட அனுப்ப வேண்டாம் என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். நேற்று இதேபோன்று கந்திகுப்பம் என்ற இடத்தில் இரண்டு குழந்தைகள் குட்டையில் மூழ்கி இறந்தது. அடுத்தடுத்த நாட்களில் இரண்டு, இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.