கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி என்பதால் இங்கு வேலைசெய்து வருபவர்கள் 6 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதியிலிருந்து வந்தவர்களாக உள்ளனர். இவர்கள் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளதால் ஒசூரில் வழக்கத்தை விட கூட்டம் குறைந்து காணப்படுகிறது.
இந்நிலையில், ஓசூர் கேசிசி நகரில் வீடுகள் காலியாக இருப்பதை அறிந்த கொள்ளையர்கள் தொடர்ச்சியாக அடுத்தடுத்த மூன்று வீடுகளில் கைவரிசைக் காட்டியுள்ளனர். மூன்று வீட்டிலிருந்து சுமார் 20 சவரன் தங்க நகையும் ஒன்றரை கிலோ வெள்ளியும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.