கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தற்போது, மாவட்டத்தில் 1,549 பேர் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சுகாதாரத் துறை, காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு தொடர்ந்து கரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.
முகக்கவசம் அணிந்து வருமாறு கையெடுத்து கும்பிட்ட காவல் ஆய்வாளர்! - காவல் ஆய்வாளர் வெங்கடாஜலம்
கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கிருஷ்ணகிரியில் காவல் ஆய்வாளர் பொதுமக்களை முகக்கவசம் அணியுமாறு கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொண்டார்.
அதன்படி நேற்று(ஏப்.21) கிருஷ்ணகிரி அடுத்த காவேரிபட்டினத்தில் காவல் ஆய்வாளர் வெங்கடாசலம் சாலையில் சென்ற பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். குறிப்பாக பேருந்துகள், இரு சக்கர வாகனத்தில் செல்ல கூடிய நபர்களை நிறுத்தி அவர்களுக்கு முகக்கவசம் வழங்கியதுடன் கட்டாயம் முகக்கவசம் அனிய வேண்டும் எனவும், தேவை இல்லாமல் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் கையெடுத்து கும்பிட்டு கேட்டுகொண்டார்.
இதையும் படிங்க:இருசக்கர வாகனங்கள் தயாரிக்கும்போதே வேக கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்த வேண்டும் - நீதிமன்றம் உத்தரவு