கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கோபனப்பள்ளி பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதி பொம்மசந்திரம். இந்தக் கிராமத்தில் 40க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 200-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இக்கிராமத்திற்கு கடந்த 25 ஆண்டுகளாக சாலை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் போராடி வந்தனர். இந்நிலையில், கடந்த உள்ளாட்சி தேர்தலில் கீதாசங்கர் என்பவர் பொம்மசந்திரா பகுதிக்கு சாலை வசதி செய்து தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.
அதன்படி, 1 கி.மீ தூரம் சாலை அமைக்க தனியாருக்கு சொந்தமான நிலங்களை தன் சொந்த பணம் ரூ.23 லட்சம் செலவில் பஞ்சாயத்து தலைவர் கீதாசங்கா் வாங்கி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மண் சாலையை அமைத்தார்.
மண்சாலை திறந்து வைக்கும் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமகிருஷ்ணன் 25 ஆண்டுகளாக சாலையில்லாத கிராம மக்கள் சாலைவசதி கிடைத்ததில் மகிழ்ச்சியடைந்தனா். இந்த மண்சாலையை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமகிருஷ்ணன் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், பஞ்சாயத்து தலைவர் கீதா சங்கர், கிராம மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:சாலை அமைக்கும் பணியை தாங்களே தொடங்கிய கிராம மக்கள்!