தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பணத்திற்காகத் தொழிலதிபர் சுட்டுக்கொலை!

கிருஷ்ணகிரி: பணத்திற்காக தொழிலதிபரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய கும்பலை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

ரியல் எஸ்டேட் அதிபர்
ரியல் எஸ்டேட் அதிபர்

By

Published : May 24, 2021, 4:28 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகேயுள்ள தளி பெல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகேஷ். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்தார். நேற்றிரவு (மே.23) வீட்டிலிருந்த இவரை காரில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், வீட்டின் கதவை தட்டி வெளியே அழைத்தது.

வீட்டில் இருந்து வெளியே வந்த லோகேஷை, அக்கும்பல் திடீரென மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியது. இதில் தலையில் பலத்த காயத்துடன் கிடந்த லோகேஷை, அவரது குடும்பத்தினர் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், லோகேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக, லோகேஷ் மனைவி அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

தொழிலதிபர் லோகேஷிடம், அக்கும்பல் ரூ.5 லட்சம் பணம் கேட்டு மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. கஜா (எ) கஜேந்திரன், எதுபூசன் உள்ளிட்ட சிலர் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் தெரியவந்துள்ளது. இவர்கள் மீது கொலை, ஆட்கடத்தல் உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதும் காவல்துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:தளர்வுகளற்ற ஊரடங்கு: இயல்பு நிலையில் இயங்குகிறதா சென்னை?

ABOUT THE AUTHOR

...view details