தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமி பாலியல் வன்கொடுமை- இளைஞர் போக்சோவில் கைது! - crime news in krishnagiri

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மலிங்கா
மலிங்கா

By

Published : Oct 3, 2020, 7:34 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உளிவீரணப்பள்ளி பகுதியில், வட மாநிலத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் அங்குள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் 15வயது மகளை அதே கிராமத்தைச் சேர்ந்த மாதேவான் மகன் மலிங்கா (23), ஆசை வார்த்தகள் கூறி கடத்திச் சென்றுள்ளார்.

இதையடுத்து அச்சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து ஓசூர் அணைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், அச்சிறுமியை மலிங்கா கர்நாடக மாநிலம் மாஸ்தி பகுதியில் வைத்திருந்தது தெரியவந்தது.

உடனே காவல் துறையினர் அப்பகுதிக்கு சென்று 15 வயது சிறுமியை மீட்டு ஓசூர் அரசு மருத்துவனையில் அனுமதித்தனர். பரிசோதனையில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்திருந்தது தெரியவந்தது. மலிங்காவை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details