தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண்களை இழிவுபடுத்திய காவல் துறை - அங்கன்வாடி ஊழியர்கள் கண்டனம்!

கிருஷ்ணகிரி: ஓசூரில் பொதுவேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற பெண்களை தவறான முறையில் காவல் துறை நடத்தியதாக அங்கன்வாடி ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Police to discredit women
Police to discredit women

By

Published : Jan 9, 2020, 8:31 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காந்தி சிலை முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் 200க்கும் மேற்ப்பட்டோர் மத்திய,மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

பின்பு அனைவரும் மத்திய அரசின் திட்டங்களினால் பொருளாதார நெருக்கடி நிலை அதிகரித்துவருவதாகக் கூறி சாலையிலேயே அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால், காவல்துறையினர் அனைவரையும் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

சாலை மறியலில் தொமுச,ஏஐடியுசி,சிஐடியு, வாகன மோட்டார் சரிபார்ப்போர் சங்கம், அங்கன்வாடி உழியர்கள் என அனைவரும் ஈடுபட்ட நிலையில் காவல் துறையினர் கைது செய்தபோது அங்கன்வாடி ஊழியர்களை தவறான முறையில் கையை பிடித்து ஆபாசமான வார்த்தைகளால் பேசி இழுத்து சென்று வாகனத்தில் ஏற்றியதாக புகார் எழுந்துள்ளது

பெண்களை இழிவுப்படுத்திய காவல்துறைக்கு அங்கன்வாடி ஊழியர்கள் எச்சரிக்கை

காவலர்களே இவ்வாறு தவறான முறையில் நடத்தியதால் அவர்களை வன்மையாக கண்டிப்பதாக அங்கன்வாடி கிருஷ்ணகிரி மாவட்ட சங்கம் சார்பில் கண்டம் தெரிவிக்கப்பட்டதுடன், காவல் துறையினர் பெண்கள் மீது கைவத்தால் மாநிலம் முழுவதும் 50 ஆயிரம் அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளோம், பின் உங்களது நிலையை யோசித்து பாருங்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: 'அனுமதியின்றி நெடுஞ்சாலைத் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது' - உயர் நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details