தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓசூரில் காவலர்களுக்கான கவாத்து நிகழ்ச்சி! - காவலர்கள் முகக்கவசம் அணிய வேண்டும்

கிருஷ்ணகிரி: கரோனா காலத்தில் காவல்துறையினர் அனைவரும் பாதுகாப்புடன் பணியாற்ற வேண்டும் என ஓசூரில் நடைபெற்ற கவாத்து நிகழ்ச்சியில் தமிழ்நாடு காவல்துறை தலைவர் அறிவுறுத்தினார்.

police-parade
police-parade

By

Published : Jul 15, 2020, 7:11 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காவல்துறை சரகத்துக்குட்பட்ட ஓசூர், சிப்காட், மத்திகிரி, ஹட்கோ, பாகலூர், பேரிகை, சூளகிரி ஆகிய காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் காவல்துறையினருக்கு கவாத்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், ஓசூர் சரக டிஎஸ்பி முரளி மற்றும் காவல்நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது தமிழ்நாடு காவல்துறை தலைவர், மேற்கு மண்ட காவல்துறை தலைவர் ஆகியோர் பேசுகையில், "கரோனா காலத்தில் காவல்துறையினர் பாதுகாப்புடன் பணியாற்ற வேண்டும். கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். முழு ஊரடங்கின்போது பொதுமக்களிடம் பணிவாக நடந்து கொள்ள வேண்டும். வாகன தணிக்கையின்போதும் மற்ற நேரங்களிலும் பொதுமக்களிடம் கண்டிப்புடன் நடந்துகொள்ள வேண்டாம்" என்றனர்.

police-parade

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து, காவலர்கள் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. மேலும், அனைவருக்கும் முகக் கவசங்களும், கிருமி நாசினி மருந்துகளும் வழங்கப்பட்டன.

ABOUT THE AUTHOR

...view details