வாகன ஓட்டிகளிடம் வழிப்பறி; இளைஞரை சுட்டு பிடித்த போலீசார்! - துப்பாக்கிச்சூடு
கிருஷ்ணகிரி: ஒசூர் அருகே தமிழ்நாடு கர்நாடக எல்லைப் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞரை துப்பாக்கியால் சுட்டு காவல்துறையினர் அதிரடியாக கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Thief
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே அத்திப்பள்ளியில் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் டிவிஎஸ் சாலையில் வாகன ஓட்டிகளிடம் இளைஞர் வழிப்பறி செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் அங்கு சென்ற காவலர்கள் வழிபறியில் ஈடுபட்ட இளைஞரை பிடிக்க முயற்சித்தனர். காவலர்களை தாக்கி இளைஞர் தப்பி ஒட முயன்றார். அவரை சரணடையுமாறு காவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதையும் மீறி ஒடியதால், இளைஞரின் கால் பகுதியை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.