கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கொத்த கொண்டபள்ளி ஏரியில் சேவல் சண்டை சூதாட்டம் நடந்துவருவதாக ஓசூர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் ஓசூர் காவல் துணை கண்காணிப்பாளர் சங்கு அளித்த உத்தரவின் பேரில் மத்திகிரி காவல் துறையினர் கொத்த கொண்டபள்ளி ஏரிக்குச் சென்றனர்.
சேவல் சண்டை நடத்திய 15 பேர் கைது!
கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே சேவல் சண்டை நடத்திய 15 பேரை கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து ரூ.75,500 பணம், கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
cock fight gambling
அப்போது ஏரியின் மறைவிடத்தில் இருபதுக்கும் மேற்பட்டோர் சேவல் சண்டை நடத்திக் கொண்டிருந்தனர். பின்னர் அவர்களை சுற்றிவளைத்த காவல் துறையினர் சேவல் நடத்திய 15 பேரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
இதையடுத்து பந்தயத்திற்கு அவர்கள் பயன்படுத்திய 75 ஆயிரத்து 500 ரொக்கம், ஒரு கார், ஐந்து இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.