கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளில் மாவட்ட நிர்வாகம், மருத்துவத் துறை, மருந்தியல் துறை, காவல் துறை உள்ளிட்ட அனைத்து துறையினரும் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளி பஞ்ஞாயத்துத் தலைவர் காயத்ரி கோவிந்தராஜ், தானே களத்தில் இறங்கி கரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட நீதிமன்றம் உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளித்துவருகிறார்.
இதேபோல் தமிழ்நாடு - கர்நாடக மாநில எல்லைப் பகுதியாக விளங்கும் வேப்பனப்பள்ளி பகுதியின் பஞ்சாயத்துத் தலைவர் கலில், கரோனா முன்னெச்சரிக்கை நடவடைக்கையில் நேரடியாக களத்தில் இறங்கியுள்ளார்.
கிருமி நாசினி தெளித்த பஞ்சாயத்து தலைவர் அவரது பகுதிக்கு வரும் பொதுமக்களுக்கு கை கழுவும் மருந்தளித்து, வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்து வருகிறார். பணியாளர்களை அமர்த்தி பணி செய்யாமல் தாங்களே களத்தில் இறங்கி பணியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நாகர்கோவிலிலிருந்து திருவனந்தபுரத்திற்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை!