தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டத்தில் மோடி உருவபொம்மை எரிப்பு! - Modi effigies burnt

கிருஷ்ணகிரி: டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஓசூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பிரதமர் மோடியின் உருவபொம்மையை அக்கட்சியினர் எரித்தனர்.

மோடி உருவபொம்மை எரித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
மோடி உருவபொம்மை எரித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

By

Published : Dec 8, 2020, 7:11 PM IST

வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி 13ஆவது நாளாக டெல்லியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராடிவருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இன்று (டிச.08) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின்போது திடீரென பிரதமர் மோடியின் உருவ பொம்மையை அக்கட்சியினர் எரித்தனர்.

இதனைக் கண்ட காவல் துறையினர் உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தி, தீயை அணைத்தனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் மகேந்திரன் கூறுகையில், “டெல்லியில் போராடிவரும் விவசாயிகளின் போராட்டத்தை பேச்சுவார்த்தை என்ற பெயரில் திசை திருப்பும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

மோடி உருவபொம்மை எரித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

பேச்சுவார்த்தைக்கு இனி இடமே கிடையாது. உலகம் கண்டிராத சரித்திர போராட்டத்தில் லட்சக்கணக்கான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். லாரி உரிமையாளர்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, பெரும் வெற்றியை ஈட்டித் தந்துள்ளனர். இனி இந்த போராட்டம் சிறிதும் பின் வாங்கப்போவது கிடையாது. போராட்டம் தொடர்ந்து நடைபெறும்” என்றார்.

இதையும் படிங்க: விவசாயிகளுக்கு ஆதரவு கோரி திமுக வலியுறுத்தல்!

ABOUT THE AUTHOR

...view details