கர்நாடகா மாநிலம் - தொட்டபெல்லாபூர் பகுதியில் ஜூன் 25ஆம் தேதி ஜமாத் உல் முஹைதீன் என்னும் தீவிரவாத அமைப்பை சேர்ந்த ஹபிபுர் ரஹ்மான் என்ற தீவிரவாதியை, தேசிய குற்ற புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தீவிரவாதியிடம் நடத்திய விசாரணையில் கர்நாடக மாநிலம், திப்பு நகரில் வைக்கப்பட்ட வெடிகுண்டுகளை காவல்துறையினர் கண்டுபிடித்து, செயல் இழக்கச் செய்தனர்.
தீவிரவாதியிடம் என்ஐஏ போலீசார் விசாரணை - terrorism
கிருஷ்ணகிரி: பெங்களூரில் கைது செய்யப்பட்ட ஜமாத் உல் முஹைதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதியை, கிருஷ்ணகிரி அழைத்து வந்து என்ஐஏ காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், இது தொடர்பாக தீவிரவாதி ஹபிபுர் ரஹ்மானிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், கிருஷ்ணகிரியில் உள்ள ஷையது பாஷா மலை மீது தங்கி, வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக சோதனை முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து குற்ற புலனாய்வு பிரிவினர், தீவிரவாதி ஹபிபுர் ரஹ்மானை கிருஷ்ணகிரி ஷையது பாஷா மலைக்கு அழைத்து சென்று, விசாரணை மேற்கொண்டனர். தீடிரென காவல்துறையினர் மக்கள் நடமாட்டம் பகுதியில் நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தீவிரவாதி ஹபிபுர் ரஹ்மான் பங்களாதேஷ் நாட்டின் ஜமாத் உல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவன் என்பதும், மேற்கு வங்க மாநிலம், பர்த்வானில் நடைபெற்ற குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடையர் என்பதும் குறிப்பிடத்தக்கது.