தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இளைஞர் சரமாரியாக வெட்டிப் படுகொலை - இரண்டு மணி நேரத்தில் கொலையாளிகள் கைது - krishnagiri youngster murder two killer arrested

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே முன் விரோதத்தால் இளைஞர் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் தொடர்புடைய கொலையாளிகள் இரண்டு மணி நேரத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இளைஞர் சரமாரியாக வெட்டிப்படுகொலை
இளைஞர் சரமாரியாக வெட்டிப்படுகொலை

By

Published : Jul 18, 2020, 4:03 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பாகலூர் கோட்டை தெருவைச் சேர்ந்தவர்கள் பார்த்தக்குமார், முனியப்பா.

இவர்கள் இருவருக்கும் இடையே, ஏற்கனவே முன்விரோதம் இருந்துவந்தது. இது தொடர்பாக, பாகலூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவாகியுள்ளது.

இந்தநிலையில், இன்று (ஜூலை 18) இருசக்கர வாகனத்தில் பார்த்தக்குமார் பாகலூரிலிருந்து ஓசூர் நோக்கிச் செல்வது முனியப்பாவுக்கு தெரியவந்தது.

இதையடுத்து, முனியப்பா தனது நண்பர் வனராஜூடன் ஒசூர் - பாகலூர் நெடுஞ்சாலையில் காலஸ்திபுரம் என்னுமிடத்தில் நின்றிருந்தார்.

பின்னர் அவ்வழியாக வந்த பார்த்தக்குமாரை இருவரும் சேர்ந்து பயங்கர ஆயுதங்களை கொண்டுத் தாக்கி கொலை செய்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான காவல் துறையினர், பார்த்தக்குமாரின் உடலை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர், கொலையாளிகள் முனியப்பா, வனராஜ் ஆகியோரை சம்பவம் நடைபெற்ற 2 மணி நேரத்தில் கைது செய்தனர்.

முன் விரோதம் காரணமாக கொலை நடைபெற்றதாகக் கூறப்படும் நிலையில், கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா; இச்சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: காதலி தற்கொலையால் மனமுடைந்த காதலன் தற்கொலை முயற்சி!

ABOUT THE AUTHOR

...view details