தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு! - கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகம்

கிருஷ்ணகிரி: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

lady
lady

By

Published : Sep 29, 2020, 7:04 AM IST

கிருஷ்ணகிரி அருகே உள்ள நடுசாலை கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார். ஓசூரில் உள்ள தனியார் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறார். இவர், கிருஷ்ணகிரி பூசாரிபட்டியைச் சேர்ந்த சீனிவாசன், சாமிநாதன் ஆகிய இருவரையும், அதே ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் பணிக்கு சேர்த்துள்ளார்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக ஆன்லைன் வர்த்தக நிறுவனம் மூடப்பட்டுவிட்டது. இதனால் இழப்பை சந்தித்ததாக கூறி சீனிவாசனும், சாமிநாதனும் வினோத்குமாரை அணுகி தங்களது இழப்பை ஈடு செய்யுமாறு வற்புறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று வினோத் வீட்டுக்கு சென்ற சாமிநாதன், சீனிவாசன் அவர் வீட்டில் இருந்த பத்து சவரன் நகை, ஒரு லட்சம் ரொக்கம் ஆகியவற்றை எடுத்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

குடும்பத்தினர்
இதனால் அதிர்ச்சி அடைந்த வினோத்குமார், அவரது தந்தை முருகேசன், தாய் எல்லம்மாள், சகோதரர் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து, தங்களது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி உயிரை காப்பாற்றினர்.

இதையும் படிங்க:விவசாயி தீக்குளிப்பு, ஆக்கிரமிப்புகளை அகற்ற அழுத்தம் கொடுத்தது யார்? - திமுக எம்பி கேள்வி

ABOUT THE AUTHOR

...view details