கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் அதிமுக முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில், 1,000க்கும் மேற்பட்ட அதிமுகவினர் பங்குபெற்றனர். இதில், சூளகிரி அதிமுக கிழக்கு ஒன்றியத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் கட்சிக்கு எதிராக செயல்படுவதாக எழுந்த புகார்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய பிரபாகரன், "தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.பி. முனுசாமி கட்சி விதிகளை காற்றில் பறக்கவிட்டு கட்சிக்கு எதிராக செயல்படுபவர்களை கட்சியில் சேர்த்து கட்சியை அழிக்கும் நோக்கில் செயல்படுகிறார். இதைக் கட்சித் தலைமைக்கு கொண்டு செல்லும் விதமாக இந்தக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.