காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள செல்போன் உதிரிபாக நிறுவனத்தில் இருந்து கடந்த அக்டோபா் மாதம் 21ஆம் தேதி மும்பை நோக்கி கன்டெய்னர் லாரியில் கொண்டு செல்லப்பட்ட 15 கோடி ரூபாய் மதிப்பிலான 13 ஆயிரத்து 920 செல்போன்களை கிருஷ்ணகிரி மாவட்டம் மேலுமலை அருகே அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று வழிமறித்து கொள்ளையடித்துச் சென்றது.
இந்த கொள்ளை கும்பலை பிடிக்க 20 பேர் கொண்ட தனிப்படை போலீசார் டெல்லி, மத்தியப் பிரதேசம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தனிப்படை போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் முக்கிய குற்றவாளியான மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த ராஜேந்தர்சவுகான் உட்பட 10 பேரை கைதுசெய்தனர்.
செல்போன் கொள்ளையா்களிடம் நடத்திய விசாரணையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செல்போன்களை கொள்ளையடித்த பின் 33 முறை வாகனங்களில் நம்பர் பிளேட்டை மாற்றி மத்தியப் பிரதேசம் சென்றதாகவும், கொள்ளையடித்த செல்போன்களை போபாலில் இருந்து 2000 செல்போன்கள் வீதம் பிரித்து டெல்லி, கொல்கத்தா, மும்பை, கவுகாத்தி, ராய்பூர் பகுதிக்கு விமானம் மூலம் அனுப்பி உள்ளனா்.