தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உதகை போல் காட்சி தரும் ஓசூர்! - கிருஷ்ணகிரி அண்மைச் செய்திகள்

கிருஷ்ணகிரி : சாலையோரம் பூத்துக்குழுங்கும் மே பூக்களால் ஓசூரானது உதகை போல ரம்மியமாக காட்சி தருகிறது.

உதகைபோல் காட்சி தரும் ஓசூர்!
உதகைபோல் காட்சி தரும் ஓசூர்!

By

Published : May 7, 2021, 7:02 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரின் பல்வேறு பகுதிகளில் சாலையோரத்தில் மே பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. இந்த பூக்களை ஆங்கிலத்தில் ஃப்ளேம் ஆஃப் ஃபாரஸ்ட் என்றும் அழைப்பர். ஓசூர் குளுமையான பகுதி என்பதால் பலராலும் குட்டி இங்கிலாந்து என அழைக்கப்பட்டு வருகிறது.

ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே பூக்கக் கூடிய மே பூக்கள் உதகையில் மட்டுமே பூக்கக் கூடியவை ஆகும். தற்போது உதகைக்குப் பின்னர் ஓசூரில் இது பூக்கத் தொடங்கியுள்ளன.

ஓசூர் - இராயக்கோட்டை, ஓசூர் - தளி, தேன்கனிக்கோட்டை ஆகிய சாலைகளின் ஓரம் மஞ்சள், சிவப்பு நிறங்களில் பூத்திருக்கும் மே பூக்கள் மனதை கொள்ளையடிப்பதாக வெளியூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க : திண்டுக்கல் ஐ.பெரியசாமிக்கு கூட்டுறவுத்துறை ஒதுக்கீடு

ABOUT THE AUTHOR

...view details