”கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகத்தில் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ் பெற 100 ரூபாயும், பிறப்புச் சான்றிதழில் திருத்தம் செய்ய 100 ரூபாயும் கையூட்டு கேட்டுவருகிறார். தினந்தோறும் இதனைப் பெற 20 முதல் 30 பொதுமக்கள் கையூட்டு வழங்கிவருகின்றனர். சம்பளத்தைத் தாண்டி பொதுமக்களிடம் கையூட்டு பெறும் இதுபோன்றவர்களின் செயலை மாவட்ட நிர்வாகம் கண்டிக்க வேண்டும். அதுவரை இந்த வீடியோவை அனைவரும் பகிருங்கள்” என காணொலி ஒன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாட்ஸ்அப் மூலம் பரவிவருகிறது.
பிறப்புச் சான்றிதழ் வழங்க கையூட்டு பெறும் அலுவலர் - வீடியோ - பிறப்பு சான்றிதழுக்கு லஞ்சம்
கிருஷ்ணகிரி: நகராட்சி அலுவலகத்தின் கீழ் பணிபுரியும் துப்புரவு ஆய்வாளர் குமார் என்பவர் பிறப்புச் சான்றிதழ் கொடுப்பதற்கு கையூட்டு பெறும் காணொலி வெளியாகியுள்ளது.
lanjam
அந்தக் காணொலியில் பிறப்புச் சான்றிதழ் வழங்க பெண் ஒருவரிடம் கையூட்டு பெறும் காட்சிகள் பதிவாகியுள்ளன. முன்னதாக இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சில தினங்களுக்கு முன்பு பிறப்பு, இறப்பு சான்றிதழை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.