தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓசூரில் நம்பி வந்தவர்களை நட்டாற்றில் விட்ட கூகுள் மேப் - ஓசூரில் கூகுள் மேப் பார்த்துக்கொண்டு

ஓசூரில் கூகுள் மேப் பார்த்து கார் ஓட்டிய நபா் குடும்பத்துடன் வெள்ளப்பெருக்கில் சிக்கினார். காரை விட்டு வெளியேற முடியாத நிலையில் தீயணைப்புத்துறை அலுவலர்கள் பத்திரமாக மீட்டனர்.

நம்பி வந்தவர்களை நட்டாற்றில் விட்ட கூகுள்... காரோடு வெள்ளத்தில் சிக்கியவர்களை காப்பாற்றிய தீயணைப்பு துறை
நம்பி வந்தவர்களை நட்டாற்றில் விட்ட கூகுள்... காரோடு வெள்ளத்தில் சிக்கியவர்களை காப்பாற்றிய தீயணைப்பு துறை

By

Published : Aug 30, 2022, 11:15 AM IST

கிருஷ்ணகிரிமாவட்டத்தில் சில நாட்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் சாலை வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. குறிப்பாக ஓசூர் அடுத்த பேகெப்பள்ளி தரைப் பாலத்தில் 5 அடிக்கு மேல் தண்ணீர் நிற்கிறது. இந்த வெள்ளி நீரில் கூகுள் மேப் பார்த்து காரை ஓட்டிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சிக்கி மீட்கப்பட்டுள்ளனர்.


கர்நாடக மாநிலம் சர்ஜாபூரை சேர்ந்த ராஜேஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன் ஓசூர் வந்துவிட்டு மீண்டும் சொந்த ஊருக்கு நேற்றிரவு திரும்பினார். அப்போது கூகுள் மேப்பை பார்த்து காரை ஓட்டி சென்றார். அப்போது பேகெப்பள்ளி தரைப் பாலத்தில் வழியாக செல்லும்படி கூகுள் மேப் காட்டியுள்ளது. இதனால், ராஜேஷ் சாலை எப்படி இருக்கிறது என்று கூட கவனிக்காமல் காரை அதே வழியில் செலுத்தியுள்ளார். அதன்பின் கார் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டது. இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதனடிப்படையில் போலீசார், தீயணைப்புத் துறையினருடன் விரைந்து 4 பேருடன் காரையும் மீட்டனர்.

இதையும் படிங்க:ராஜினாமா செய்து விட்டு கழகப் பணி ஆற்றுவேம் என்றேன்... யாரும் முன்வரவில்லை... ஓ. பன்னீர்செல்வம்...

ABOUT THE AUTHOR

...view details