தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிருஷ்ணகிரியில் நடந்த விவசாயிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம்! - தென்பெண்ணை நீர் பாசன சங்க விவசாயிகளின்

கிருஷ்ணகிரி: சூளகிரி அருகே தென்பெண்ணை நீர்ப்பாசன சங்க விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டத்தின்போது தென்பெண்ணை ஆற்றின் வீணாகப்போகும் உபரி நீரை கால்வாய்கள் மூலமாக எரிகளுக்கு விட நடநடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விவசாயிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம்!

By

Published : Sep 22, 2019, 11:27 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள அகரம் என்ற கிராமத்தில் தென்பெண்ணை நீர்ப்பாசன சங்க விவசாயிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தின்போது, தென்பெண்ணை ஆற்றில் ஆண்டுதோறும் உபரியாக வீணாகும் பல லட்சம் கன அடி நீரை, கால்வாய்கள் மூலமாகக் கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தென்பெண்ணை ஆற்றின் தண்ணீரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களை நிரப்பிய பின் வெளி மாவட்டங்களுக்கு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும் இந்தக் கூட்டத்தின்போது தென்பெண்ணை ஆற்று தண்ணீர் கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் பயன்படுதிய பின்புதான் வெளி மாவட்டங்களுக்கு கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கள் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

விவசாயிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம்

எனவே, தென்பெண்ணை ஆற்றில் உபரி நீரை கால்வாய்கள் மூலமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நிரப்ப வலியுறுத்தி வரும் 26ஆம் தேதி ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஒன்று திரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நேக்கி பேரணி நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

இதையும் படிங்க : விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு!

ABOUT THE AUTHOR

...view details